மோர்கன்ரேலர் கிளினிக் (ஆழசபநவெயடநச ஊடஇனிஉ) மருத்துவ சிகிச்சை நிலையம் பாதுகாப்பானஇ சட்ட வரம்புக்கு உட்பட்ட முறையில் கருச்சிதைவு செய்யும் சேவையினை வழங்குகிறது. அத்துடன் பாதுகாப்பான சேவைக்கு மிகுந்த புகழ் பெற்ற ஒரு நிலையமாக இது விளங்குகிறது. பிரபல ஓர்டர்; ஒஃப் கனடா (ழுசனநச ழக ஊயயெனய) விருதினைச் சமீபத்தில் பெற்றவரான வைத்திய கலாநிதி மோர்கன்ரேலர் (னுச. ஆழசபநவெயடநச) அவர்கள் கடந்த 32 வருடங்களாகக் கனடாவில் பெண்களின் உரிமைகளுக்காகக் போராடி வந்துள்ளார்.

இந்நிலையத்தில் உங்களைப் புரிந்துகொண்டுஇ உணர்வுகளுக்கு மதிப்புத் தந்துஇ அன்பான முறையில் சிகிச்சை வழங்கப்படும். கர்ப்பத்தை முடிவுக்குக் கொண்டுவர நீங்கள் எடுத்தது ஒரு க~;டமான முடிவாக இருக்கலாம். ஆயினும் இங்குள்ள பணியாளர்கள் எல்லோரும் உங்களை மரியாதையுடன் நடத்துவர். எங்களுக்கு நீங்கள் தரும் தகவல் யாவும் மிகவும் உறுதியுடன் அந்தரங்கமாக வைக்கப்படும். அத்துடன் உங்களின் தனிமைக்கும் உரிய கௌரவம் அளிக்கப்படும்.

இது ஒரு இலவச சேவை ஆகும். மாகாண அரசாங்கத்தின் நிதியுதவி வசதி உங்களுக்கு இருக்கும் என்றால் அந்த மாகாண அரசாங்கத் திட்டத்தின் கீழ் உங்களுக்குக் கருச்சிதைவுச் சேவை வழங்கப்படும். இவ்வாறான காப்புறுதி இல்லாதவர்கள் தொடர்பான கட்டணங்கள் எங்களுடைய இணையத் தளத்தில் பட்டியலிட்டுத் தரப்பட்டு இருப்பதைக் காணலாம்.